ஒரு நாய் 25 பேரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் […]
