ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆண்டாவூரணி பகுதியில் உள்ளமணவாளன் கண்மாய்கரையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பான ஒரு டிராக்டரை பறிமுதல் திருவாடானை துணை தாசில்தார் சேதுராமன் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யுமாறு துணை […]
