தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளியில் சென்ராயன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சென்ராயன் அவரது நண்பர் ஜெய்கணேசுடன் தேவதானப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை ஜெய்கணேஷ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது ஜெய்கணேஷ் மற்றும் […]
