பெரம்பலூரில் நேற்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று நோயால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
