ஒருதலைக்காதலால் வாலிபர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழ் பள்ளிவாசல் பகுதியில் வசித்த பூ வியாபாரி அப்பாஸ் என்பவருடைய மகன் ஆசிக் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்து விட்டார். […]
