ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இவற்றை இணைத்து ஒருங்கிணைந்த பென்ஷன் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]
