மதுரை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிதாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோன்று எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது பாதிப்பு […]
