மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக நிவாரணம் தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகில் திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி(60). இவர் கடந்த 20 வருடங்களாக பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மார்த்தால் காரியாங்கோணம் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு தினங்களாக மின்சாரம் இல்லை. இதுகுறித்து பொறியாளருக்கு வந்த அழைப்பின் […]
