நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கின்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தகம் இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரயில்வே அறிவியல் விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு போன்றவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
