நாட்டின் அமைதியை சீர் குலைத்தால் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை ஒன்றிய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை, வெளிநாடுகளுடனான நல்லுறவு, அமைதி, நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றையெல்லாம் பாதிக்கும் வகையில் செயல்பட்டாலும் அல்லது அவதூறு பரப்பி, வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கான அங்கீகாரம் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை ரத்து செய்யப்படும் […]
