ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனபால் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டர் திவ்யதரிசினியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிச்சாமி என்பவர் துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கலந்தாலோசிக்காமல் தனியாக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவாய் இழப்பை […]
