தமிழக அரசு பள்ளிகளில் நிகழும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 13ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கையும் அன்றைய தினமே தொடங்கியுள்ளது. சேர்க்கை தொடங்கிய முதல் இரு நாட்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த ஒரு மாதத்தில் அரசு பள்ளிகளில் 9.40 லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இது […]
