ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் நடந்த பீரங்கி குண்டு தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள டோஹூக் பகுதியின் சாகோ என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பூங்கா செயல்பட்டு கொண்டுள்ளது. இந்தப் பூங்கா மீது நேற்று முன்தினம் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அப்பாவி மக்கள் உள்பட 9 சுற்றுலாப்பயணிகளும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
