திருவட்டார் அருகே செல்போன் வாங்கித் தராத காரணத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோவிக்கோட்டுவிளை வீயனூர் பகுதியில் வினுகுமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அவரின் மகன் கிஷோன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், தன்னுடைய மகனை சகோதரியின் பராமரிப்பில் வினுகுமார் வளர்த்து வருகிறார். கிஷோன் அங்கேயே தங்கி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். வினுகுமார் அவருடைய தாயாருடன் வசிக்கிறார். இந்நிலையில் […]
