தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ற 2008 ஆம் வருடம் மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினார்கள். இதன்பின் கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகையால் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போல வேடமணிந்து முக்கிய பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவார்கள். […]
