வாக்குச்சாவடியில் அதிகாரியுடன் மது போதையில் தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஒருசில வாக்குச்சாவடிகளில் மட்டும் சில பிரச்சினைகள் நிலவியது. அதாவது ஓமலூர் ஒன்றியத்தில் 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்கும் வகையில் பெரியேரிப்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிக்கு வந்த பெரும்பாலானோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அப்போது அங்கு ஒருவர் பின் ஒருவராகச் சென்று […]
