இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட சூழல் நிலவி வந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் 5 மணி நேரம் பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாக்கடை நீருடன் […]
