ஒடிசாவில் கடித்த பாம்பை தனது வாயால் விவசாயி ஒருவர் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் சாலிஜங்கா பஞ்சாயத்திற்கு உட்பட்ட கம்பிர்பாதியா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயி பத்ர் (45). இவர், தனது நெல் வயலில் இரவு நேரத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது காலில் ஏதே கடிப்பது போன்று உணர்ந்தார். கீழே குனிந்து பார்த்த போது பாம்பு ஒன்று கடித்துவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் […]
