வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]
