கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு 100 சதவிகிதம் எந்தவித குறைபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக சில வீடியோக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் பொய்யானவை எந்த கிராம மக்களும் அதுபோல பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து குறை கூறவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான வெல்லம் […]
