ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க்கில் ஐ.நா.தலைமை அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்பவர் போல் தாடை பகுதியில் துப்பாக்கி வைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரிடம் காவல்துறையினர் துப்பாக்கியை கீழே போட்டுவிடுமாறு அறிவுறுத்தினர். அப்போது அந்த நபர் ஐ.நா. அலுவலகத்தில் சில ஆவணங்களை வழங்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டதால் அந்த நபர் தானாகவே முன்வந்து சரணடைந்தார். […]
