ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.சபையின் 76 ஆவது பொதுக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரியும் ஐ.நா. சபையின் முதன்மைச் செயலருமான சினேகா துபே IFS கலந்து கொண்டார். இதே போன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் […]
