இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் ஐ.நா உணவு திட்ட இயக்குனர் அந்நாட்டிற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ செயற்கை உரங்களை தடை செய்தார். அதன்பிறகு அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துவிட்டது. டாலர் பற்றாக்குறை காரணமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எனவே நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை உண்டாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.நாவிற்கான உலக உணவு திட்ட செயல் இயக்குனராக இருக்கும் டேவிட் […]
