ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களுக்குரிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு துணை பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆக்கிரமித்த பின் சிறுமிகள், பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்க அனுமதில் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் பங்கேற்பதும் தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் தற்போது வரை 700 மக்கள் […]
