ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் மாலியில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. அமைதிப்படை ஊழியர்கள் மாலியின் கிடால் பிராந்தியத்தில் உள்ள டெசாலிட் நகரில் காரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய கார் எதிர்பாராதவிதமாக சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது. அந்தக் கோர சம்பவத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. […]
