ஆற்காடு அருகே 100 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வரும் கோபி நாராயணபுரத்தில் விவசாய நிலத்தில் தனது கார் ஓட்டுனர் தினேஷ் உதவியுடன் காரை ஓட்ட பழகியுள்ளார். அப்போது வரப்பில் சிக்கிக் கொண்ட காரை கோபி ரிவல்ஸ் எடுத்தபோது பின் நோக்கி சென்ற வேகமாக கார் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. […]
