அந்தமான்-நிகோபாா் தீவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜிதேந்தா் நாராயண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ஒழுக்கத்தை மீறும் அரசுப்பணியாளா்கள் எந்த நிலையில் பணிபுரிந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்காது. இதுபோன்ற பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜிதேந்தா் நாரயண் அந்தமான்-நிகோபாரில் தலைமை செயலராகப் பணிப்புரிந்தார். […]
