ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஐ.நா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் காபூலில் இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த 19 ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மையம் அமைந்திருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் […]
