ஆப்கானிஸ்தானில் 17 சதவிகித மாவட்டங்கள் ஐ.எஸ்.கே கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகர் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 50 பேர் பலியாயினர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ஷியா பிரிவை பின்பற்றும் சிறுபான்மையினர் ஆவர். மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்கே எனும் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலீபான்களுக்கு […]
