ஐஸ்லாந்து நாட்டின் சர்வதேச விமானநிலையம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன் வெடிக்க தொடங்கிய எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தலைநகரான ரேக்ஜவிக்கிள் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை அமைந்திருக்கிறது. அப்பகுதியில் சென்ற சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த 3ஆம் தேதி எரிமலை வெடிக்க துவங்கியது. அடுத்தடுத்த தினங்களில் எரிமலையில் இருந்து புகையுடன்கூடிய […]
