ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2024 முதல் ஒரே மாதிரியான போன் சார்ஜரைதான் அனைத்து போன்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதிரியான செல்போன் சார்ஜர்களை வெளியிடுகிறார்கள். இதனால் ஒரே வீட்டில் வசிக்கும் நான்கு பேர் நான்கு சார்ஜர்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. இந்த புதிய உத்தரவினால் ஒரே சார்ஜரைக் கொண்டு அனைவரது போன்களிலும் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.
