சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க கூடிய இந்த நிலையில் தற்பொழுது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரிசனம் செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
