Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே அணிக்கு இருக்குற பிரச்சன இதுதான் ‘ ….! கவுதம் கம்பீர் பேச்சு ….!!!

அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. 14-வது ஐபிஎல் தொடரின்  2-வது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி அமீரகத்தில்  நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. இதில் நடப்பு சீசனில்  சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்ற கடும் முயற்சியை  மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் சிஎஸ்கே அணிக்கு பிரச்சினை இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எல்லாருமே திறமை சாலிங்கதான்’ ….. பொறுத்திருந்து பார்ப்போம் …. விராட் கோலி ஓபன் டாக் ….!!!

ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள மாற்று வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 2-வது பாதி ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளனர் . இதனால் இவர்களுக்கு பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்க …. அமீரகம் வந்தடைந்த ஆப்கான் வீரர்கள் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரஷீத் கான், முகமது நபி இருவரும் அணியில் இணைந்தனர் . 14-வது சீசன் ஐபில் தொடரின் 2-வது பாதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கான்  வீரராக ரஷீத் கான், முகமது நபி இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது பாதி  ஆட்டத்திலிருந்து …. இங்கிலாந்து நட்சத்திர  வீரர்கள் விலகல் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2-வது பாதி  ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர  வீரர்கள் விலகியுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் மற்றும்  கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : யு.ஏ.இ-க்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ….!!!

இங்கிலாந்து அணிக்கு  எதிரான 5-வது டெஸ்ட் போட்டி  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் யு.ஏ.இ-க்கு சென்றுள்ளனர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் தொடர் 17-ம் தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி  அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ஆர்சிபி-யில் இருந்து விலகிய தமிழக வீரர் …. காரணம் இதுதான் ….!!!

காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இந்நிலையில் ஆர்சிபி அணியில் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘யு.ஏ.இ-யில் நடக்கும் ஐபிஎல் போட்டி’….”பால்கனி ரூம் புக் பண்ணுங்க”….” ரெய்னாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் “…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா  தொற்று பரவல் காரணமாக ,  ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவை வைத்து ,சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி மட்டும் நடத்தியிருந்தால்…. “நானே தொடரில் இருந்து பாதியில் விலகிருப்பேன்”- யுஸ்வேந்திர சாஹல்….!!!

14வது ஐபில் தொடரில்  வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது . இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடரானது , கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ  அறிவித்தது. இதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுவதாக முடிவு செய்துள்ளது. இதில்  போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா….! நாளை மும்பை செல்கிறார் …!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  ,கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்  பிரசித் கிருஷ்ணா குணமடைந்தார் . 14 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் சென்னை, மும்பை நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன .அதன் பிறகு டெல்லி , அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வீரர்களுக்கு தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னுடைய கொரோனா பாதிப்பு பற்றி …. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் -விருத்திமான் சஹா…!!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் அணி வீரர் , விருத்திமான் சஹா  சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார். 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம்  தேதி முதல் தொடங்கி, பயோ பபுள்  பாதுகாப்பு வளையத்திற்குள், நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அன்று நடைபெற இருந்த 30  வது லீக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் மறுநாள் மற்ற அணியில் ஒரு சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்கள தொடர்ந்து நாங்களும்’…. “ஐபில் போட்டில விளையாட மாட்டோம்” …! “ஷாக் கொடுத்த நியூசிலாந்து” ….!!!

மீதமுள்ள ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வீரர்களும், பங்குபெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை…. இந்தியாவில் நடத்துவது கஷ்டம்தான் …! சௌரவ் கங்குலி தகவல் …!!!

எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை , இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு …! பயங்கர குஷியில் முதலீட்டாளர்கள்…!!!

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகள்  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை நடத்துவது பற்றி,பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. எனவே  ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் … ‘சைலண்டா இருந்து சாதனை பண்ணியிருக்காரு’…! இளம் வீரரை புகழ்ந்த சேவாக்…!!!

ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு , கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிரடி வீரர்களுக்கே பயத்தை காட்டினார். இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் … விலகிய டிரென்ட் பவுல்ட்…!!!

ஐபில் போட்டியில் பங்குபெற்ற, நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகளை  காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற நியூசிலாந்து வீரர்களில், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் ,வருகின்ற 11ம் தேதி டெல்லியில் இருந்து, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு திரும்ப உள்ளனர் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பிசிசிஐ -க்கு உதவிய மும்பை இந்தியன்ஸ்’ …! வீரர்களை நெகிழ வைத்த சம்பவம் …!!!

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பிசிசிஐ-க்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சொந்த ஊருக்கும் போக முடியாது’… ‘மேட்சும் விளையாட முடியாது’… தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் …!!

ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் , சொந்த நாட்டிற்கு திரும்புவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனோ தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால்,மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா  தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா மே 15ஆம் தேதி வரை தடை நீடித்திருக்கிறது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டாடி ப்ளீஸ் சீக்கிரமா வீட்டுக்கு வாங்க”… ‘செல்ல மகளின் உருக்கமான பதிவு’…! சிக்கித்தவிக்கும் வார்னர்…!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடம்பெற்றுள்ள , டேவிட் வார்னரின் மகள் இவி வரைந்த படம் இணையத்தில்  வைரலாக பரவுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ,ஒரு சில வீரர்களுக்கு தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகள்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, பல வருடங்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐபிஎல் தொடரை , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்கலாம் …! முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி…!!!

ஐபிஎல் தொடரை   , சென்ற வருடம் போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் , என்று கர்சன் காவ்ரி  கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதித்தவர்களின், தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் ,மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியை பாதியில்… நிறுத்தியதற்கு காரணம் இதுதான் – ராஜீவ் சுக்லா விளக்கம்…!!!

ஐபில் போட்டியை  நிறுத்தியதற்கான காரணத்திற்கு ,பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார் . 14 வது ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ,ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கும் சிஎஸ்கே அணியை சேர்ந்த பயிற்சியாளருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனிமைப்படுத்தப்பட்ட சிஎஸ்கே அணி..! நாளைய போட்டி ரத்து செய்யப்படுமா … வெளியான தகவல் …!!!

நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் -சென்னை அணிகளுக்கிடையான போட்டி, ரத்து செய்யப் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , உயிரிழப்புகள்  அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபில் போட்டியில் பங்குபெற்றுள்ள வீரர்கள் ,பணியாளர்களுக்கு  கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தா அணி 2 வீரர்களுக்கும் மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மற்றும் பணியாளருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால்  நேற்று நடக்கவிருந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: ஹைதராபாத் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா…? மும்பை-ஹைதராபாத் இன்று மோதல் …!!!

இன்று நடைபெறும் 31வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா- பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியில், கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கு , கொரோனா  தொற்று ஏற்பட்டதால் அந்த போட்டி ரத்தானது. எனவே இன்று நடைபெற உள்ள போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்  7  போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி,  ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS DC : ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால்…! 7 விக்கெட் வித்தியாசத்தில்… டெல்லி அணி வெற்றி …!!!

ஷிகர் தவான் அட்டமிழக்காமல் அதிரடி காட்ட , டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்       6 வது வெற்றியை  கைப்பற்றியது  . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற  29 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  மோதின . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் – மயங்க்  அகர்வால்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS SRH : ஹைதராபாத்தை அலறவிட்ட ராஜஸ்தான் …! 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ,ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி   பெற்றது . 14வது  ஐ.பி.எல் தொடரின் , 28 வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால்,ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்டலர் – ஜெய்ஸ்வால்  ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

14 வருஷ ஐபில் போட்டில்… ‘இப்படி ஒரு சாதனையை யாருமே பண்ணல’…! “தோற்ற மேட்சிலும் சாதனை படைத்த சிஎஸ்கே” …!!!

நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில்,ஐபில் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி     புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதிகட்டத்தில் ,மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை அணி வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய போட்டியில் கேப்டன் ராகுல் இல்லை …! பஞ்சாப் கிங்ஸ் போட்ட ட்விட் …அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!!

இன்று நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் , பஞ்சாப் அணியின் கேப்டனாக            கே.எல்.ராகுல் விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது . இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் இந்த சீசன் ஐபிஎல் தொடரில், அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார். இதனால் இவர் அதிக ரன்களை குவித்த பட்டியலில் 331 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: 4 வது இடத்தை தக்கவைத்து கொண்ட மும்பை அணி …! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்று நடந்த  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில்8 புள்ளிகள் எடுத்துள்ளது . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 7  போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,2 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து  பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.263  ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: இன்றைய முதல் போட்டியில் …ராஜஸ்தான் – ஹைதராபாத் மோதல் …!!!

14வது ஐபிஎல் தொடரில் , இன்று நடக்கும்   2 போட்டிகளில் , ராஜஸ்தான்-ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் – டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன . ராஜஸ்தான் ராயல்ஸ் –  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும், 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் –  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி , 2  போட்டிகளில் வெற்றி பெற்று, 4 தோல்விகளை சந்தித்து உள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: 5வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் …! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்று நடந்த  போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக  தரவரிசை பட்டியலில் 5 வது இடத்தை கைப்பற்றியது  . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475  ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஆர்சிபி அணியை துவம்சம் செய்த பஞ்சாப்’ …! 34 ரன்கள் வித்தியாசத்தில்… பஞ்சாப் அபார வெற்றி…!!!

ராகுல், ஹர்பிரீத் அதிரடி ஆட்டத்தால் 34 ரன்கள் வித்தியாசத்தில் ,ஆர்சிபி அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது . நேற்று அகமதாபாத்தில்  நடைபெற்ற ,26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதின .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், பிரப்சிம்ரன் சிங்  ஜோடி களமிறங்கினர் .இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து வெளியேற, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லட்டு மாதிரி கிடைச்ச சான்ஸ்’…! தவறவிட்ட சஞ்சு சாம்சன்… வெளியான வீடியோ …!!!

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பந்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்று நடந்த போட்டியில் ,ராஜஸ்தான் அணி பீல்டிங்கில் களமிறங்கியது. அப்போது 2 வது ஓவரில் உனத்கட்  பந்து வீசினார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: 6 வது வெற்றியை கைப்பற்றுமா ஆர்சிபி …! பஞ்சாப்-பெங்களூர் இன்று மோதல் …!!!

இன்றைய 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற உள்ள 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி  அகமதாபாத்தில் உள்ள , நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 6 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி , 1 தோல்வியை சந்தித்து, 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல 6 போட்டிகளில் விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: முதல் 3 இடங்களுக்கு…போட்டி போட்டு கொள்ளும் அணிகள் …! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக மீண்டும் தரவரிசை பட்டியலில் 2 வது இடத்தை   கைப்பற்றியது  . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475  ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : அதிரடி காட்டிய பிரித்வி ஷா…! 7 விக்கெட் வித்தியாசத்தில்…டெல்லி அணி அபார வெற்றி..!!!

பிரித்வி ஷா , ஷிகர் தவானின்  அதிரடியால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற  , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதின . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால்…! மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி …!!!

டி காக்-யின்   அதிரடி ஆட்டத்தால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை அணி  வெற்றியை கைப்பற்றியது . ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல்  போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்தது.இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்…! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா ஷிகர் தவான் ஸ்டீவ் ஸ்மித் ரிஷாப் பந்த்(கேப்டன்) மார்கஸ் ஸ்டோய்னிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : 172 ரன்களை மும்பைக்கு…. வெற்றி இலக்காக வைத்த ராஜஸ்தான் …!!!

சஞ்சு சாம்சன் 42 ரன்கள் ,ஜோஸ் பட்டலர் 41 ரன்களை குவிக்க இறுதியில் ராஜஸ்தான்அணி 171 ரன்களை குவித்துள்ளது . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல்  போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த  போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : 1 விக்கெட் இழந்த ராஜஸ்தான் …! ஜோஸ் பட்டலர் அவுட் …!!!

24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…! பீல்டிங்கை  தேர்வு செய்தது …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 24 வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை    தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் ரோஹித் சர்மா (கேப்டன்) சூர்யகுமார் யாதவ் கீரோன் பொல்லார்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ருதுராஜ் , டு பிளிஸ்சிஸ் அதிரடி தொடக்கம் …! ஹைதராபாத்தை வீழ்த்தி…5 வது வெற்றியை கைப்பற்றிய சிஎஸ்கே…!!!

ருதுராஜ் , டு பிளிஸ்சிஸின் அதிரடி தொடக்கத்தால் , ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . நேற்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற  , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதின . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – ஜானி  பெரஸ்டோவ் ஜோடி களமிறங்கினர்  .இதில் பெரஸ்டோவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH : 6 ஓவரில் 1 விக்கெட் இழந்த ஹைதராபாத் …! ஜானி  பெரஸ்டோவ் அவுட் …!!!

23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் … 5 ஆயிரம் ரன்களை கடந்து ….ஏபி டி வில்லியர்ஸ் சாதனை …!!!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த, வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார். நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணியின் விளையாடிய ஏபி டி வில்லியம்ஸ், 42 பந்துகளில் 5 சிக்சர் ,3 பவுண்டரிகளை அடித்து 75 ரன்களை குவித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் ,5 ஆயிரம்  ரன்களை கடந்த, 2வது வெளிநாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: வெற்றி கணக்கை தொடருமா சிஎஸ்கே …? சென்னை-ஹைதராபாத் இன்று மோதல் …!!!

இன்றைய 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறும் 23-வது லீக் போட்டியானது , டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி ,1 தோல்வியை சந்தித்து ,  4 போட்டிகளில் வென்று தரவரிசை பட்டியலில் ,2 வது இடத்தைப் பெற்றுள்ளது. இதுபோல 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB: ரிஷப் பண்ட், ஹெட்மயர் போராட்டம் வீணாணது.. … ஒரு ரன் வித்தியாசத்தில்….. ஆர்சிபி திரில் வெற்றி…!!!

ரிஷப் பண்ட்,ஹெட்மயர் அரை சதம் எடுத்துடும் , 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது . நேற்று அகமதாபாத்தில்நடைபெற்ற  , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதின .  இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால்,ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் கோலி- தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் . இதில் விராட் கோலி 12 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: அஸ்வினுக்கு பதிலாக … இவர்தான் விளையாடுகிறார்… யார் அந்த வீரர் …?

டெல்லி அணியின் அஸ்வினுக்கு பதிலாக, இஷாந்த் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் 22வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ,டெல்லி அணி இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வின், தனது குடும்ப சூழல் காரணமா, ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். அஸ்வின் விலகியதால் டெல்லி அணியின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு பதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB : ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி …! 172 ரன்களை டெல்லிக்கு … வெற்றி இலக்காக வைத்த ஆர்சிபி…!!

ஏபி டிவில்லியர்ஸின்  அதிரடி ஆட்டத்தால் , ஆர்சிபி அணி  171 ரன்களை குவித்துள்ளது . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில்,  நடக்கிறது  . இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்தது .இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB : 15 ஓவரில் 4 விக்கெட் …! மெஸ்க்வெல் அவுட் …!!!

22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில்,  தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB : 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் …! தொடக்க வீரர்கள் அவுட் …!!!

22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில்,  தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ்…! பீல்டிங்  தேர்வு…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: டெல்லி கேப்பிட்டல்ஸ் : பிருத்வி ஷா ஷிகர் தவான் ஸ்டீவ் ஸ்மித் ரிஷாப் பந்த்(கேப்டன்) மார்கஸ் ஸ்டோய்னிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: கடைசியில் இருந்து…. 5வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா…! வெளியான புள்ளி பட்டியல்…!!!

நேற்றைய போட்டியில்  மூலம் , தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்த, கொல்கத்தா அணி  5 வது இடத்திற்கு  முன்னேறியது . 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  +1.612 ஆக உள்ளது. 2ஆம் இடம்  – டெல்லி […]

Categories

Tech |