தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை ஆணையர் […]
