நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவுக்கு ஐநா பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவின் பல துறைகளை தனியார் மயமாக்குவதாக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில், தற்போது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, கிட்டத்தட்ட 41 ஒரு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார். […]
