பெங்களூரு நகரிலுள்ள பல ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்லவேண்டிய நிலை உருவாகியது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மி.மீ மழைபெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பல பேர் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு டிராக்டர்களில் சென்றனர். பெங்களூரு நகரத்திலுள்ள ஐடி […]
