சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே விஜய் (27) என்பவர் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
