ஐசிசி டெஸ்ட்கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அதோடு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது […]
