வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார் இந்திய வீரர் இஷான் கிஷன்.. இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. […]
