Categories
உலக செய்திகள்

ஐ.நாவிற்கு காந்தி சிலையை பரிசளித்த இந்தியா…. அடுத்த மாதத்தில் திறப்பு விழா…!!!

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதம்.. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முக்கிய முடிவு..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற தீர்மானித்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு அந்த தீர்மானத்தில் சம்மதமில்லை. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை திரும்பப்பெற தொடங்கியது தான் தலிபான்களுக்கு நாட்டை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஆனால், இதனை இப்படியே விட முடியாது என்று முடிவெடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இன்று ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை வருத்தமளிக்கிறது.. இந்திய தூதர் கருத்து..!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்படும் பதற்ற நிலை வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறார். ஐ.நா சபையின் இந்திய தூதரான திருமூர்த்தி, இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான சுழற்சி முறையில் தலைவராக பதவியேற்கவிருக்கிறது. ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டில் சாதாரணமாக இயங்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பப் பெற்றதைத்தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றமான […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!” உலகையே அச்சுறுத்த புதிய ஆயுதம்… கைக்கோர்த்த பிரபல நாடுகள்.. ரகசிய தகவல் வெளியீடு …!!

ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் இணைந்து ஏவுகணை திட்டத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் அதிக தூரத்திற்கு ஏவுகணையை மேம்படுத்தும் திட்டத்திற்கு மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குரிய சில முக்கிய பாகங்களை ஈரானுக்கு வடகொரிய வழங்கிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை கடந்த வருடம் சமீபத்தில்தான் வடகொரியாவிலிருந்து  ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories

Tech |