ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சில உதவி திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ள காரணங்களினால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் உதவி பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலிபான் […]
