பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் புதிய ஏ.டி.எம். இயந்திரம் அமைத்து தருமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராம பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காளிங்கராயநல்லூர், வசிஸ்டபுரம், அத்தியூர், வயலூர் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் கணக்கு வரவு, செலவு செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் […]
