ஜெர்மனியில் பொதுத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தேர்தல் முடிவு ஒளிபரப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் செப்டம்பர் 26 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ARD சேனலில் வினாடி வினா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது திடீரென திரையின் கீழ் பகுதியில் பொது தேர்தல் முடிவுகளை காட்டும் பேனர் தோன்றியது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ஜெர்மன் பொதுத்தேர்தலில் யூனியன் கட்சி 22.1 […]
