மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் […]
