சிலி நாட்டில் இருக்கும் ஆல்டிபிளானோ என்னும் நகராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், தீ விபத்து ஏற்பட்டு, 100-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையானது. எனவே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வீடுகள் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ அதிவேகத்தில் பரவியிருக்கிறது. இந்நிலையில், அங்கு வசிக்கும் ஏழை மக்கள், அரசாங்கம் தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனினும், […]
