மிகவும் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 25 பேரை குழு உறுப்பினர்களாகவும், 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாகவும் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார். இதில் தமிழகத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் ஒருவராவார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஏழுமலையான் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. […]
