திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறமாக 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் அன்பு நகரில் இருக்கும் வியாபாரிகள் சங்கத்திடலில் […]
