மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக பிரித்தானியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 2-ம் எலிசபெத் மகாராணியார், Corgi என்று அழைக்கப்படும் ஒருவகை குள்ளமான நாய்களை வைத்திருந்தார். அவருக்கு சொந்தமாக 30 நாய்கள் இருந்தன. இந்நிலையில், மகாராணியார் வைத்திருந்த அதே வகை நாய்களை வைத்திருக்கும் பலர், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். மகாராணியாரின் மறைவுக்காக தங்கள் செல்லப்பிராணிகளும் துக்கம் அனுசரிப்பதாக சிலர் தெரிவித்துள்ளார்கள். சிலர், தங்கள் செல்லபிராணிகள் முன்பைவிட […]
