விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]
