சென்னையில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வளர்ப்பு நாய்களை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் துப்பாக்கி பயிற்சியையும் மேற்கொள்கிறார்.அதற்காக இவர் இரண்டு உயர்ரக ஏர்கன் உள்பட மூன்று ஏர்கன்களை வாங்கி வீட்டிலேயே பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து நிஜ துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்துள்ளது. அச்சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அம்பத்தூர் உதவி ஆணையரிடம் புகார் […]
